தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்தோம். அந்தக் காலப்பகுதியிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத் தகைய பின்னணியில் வரியை அதிகரிக்குமாறு மக்கள் கோரினர். ஆனால், தற்போது வரியை அதிகரிக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பணிமனையில் நேற்று அவர்
நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
கட்சி என்ற வகையில் சிறீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கும் தயாராகவே உள்ளது. அரசமைப்புக்கு அமைய இந்த ஆண்டில் தேர்தல் நடைபெறவேண்டும்.
கிராமிய மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் தற்போதைய நிலையில் சிறீலங்கா பொதுஜன பெரமுன பலமான கட்சியாகும். புனை கதைகளையே எந்தக் கட்சியாலும் கூறமுடியும்.
கீழ் மட்ட மக்களுக்குவழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றிய கட்சி என்றால் அது சிறீ லங்கா
பொதுஜன பெரமுனவே.
வாழ்க்கை செலவை குறைத்துக் கொண்டு தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தோம். அந்த காலப்பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இத்தகைய பின்னணியில் வரியை அதிகரிக்குமாறு மக்கள் கோரினர்.
ஆனால் தற்போது வரியை அதிகரிக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகைள முன்னெடுத்து வருகின்றோம் – என்றார்.