மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேரை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிமை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் வீடொன்றுக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து காத்தான்குடி பெரும் குற்றத்தடுப்பு
பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையில் விசாரணைகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறுமியை வன்புணர்வு மேற்கொண்ட அந்த பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இருவரும் 32 வயதுடைய ஒருவரும் என 3 பேரை நேற்று கைது செய்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதானவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.