ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என ஜே. வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தைதெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
அடுத்து நடக்கப் போவது ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டில் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றியீட்டுவோம். ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட்டால் ரணில் நிச்சயமாக தோல்வி அடைவார்.
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அதில் வெற்றியீட்டி, ஜனாதிபதித் தேர்தலை
நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு காரணமாக எந்த தேர்தலை முன்கூட்டி நடத்துவது என்பதில் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு சாதகமற்ற தேர்தல் ஒன்றை நடத்துவதற்கே அரசாங்கம்
விரும்புகிறது – என்றார்.