நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நாட்களில் அரை மணி நேரத்துக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகிறது.
2600 இற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளது. இது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள அறிவிப்பில்,
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டையை என்பவற்றை வைத்திருப்பது கட்டாயமானது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.