பெறுமதி சேர் வரிகள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில்,
92 ஒக்டைன் பெற்றோல் 20 ரூபாவினால் அதிகரித்து 366 ரூபாவிற்கும்,
85 ஒக்டைன் பெற்றோல் 38 ரூபாவினாலும் அதிகரித்து 464 ரூபாவிற்கும்,
ஓட்டோ டீசல் 29 ரூபாவினால் அதிகரித்து 358 ரூபாவிற்கும்,
சுப்பர் டீசல் 41 ரூபாவினால் அதிகரித்து 475 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
அதேவேளை,
மண்ணெண்ணை மட்டும் 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் – இலங்கை கனிவளக் கூட்டுத்தாபனம்