நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யக்கல பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின்போது, அவர் கொவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.