கிறிஸ்மஸ் விடுமுறைக்காக இடைநிறுத்தப்பட்டிருந்ததன் பின்னர் நேற்று புதன்கிழமை நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,422 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 35 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருளுக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ள 73 சந்தேக நபர்களும் நேற்றுக் கைது செய்யப்பட்டதாகவும் இந்த நடவடிக்கையில் 347 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ் மற்றும் 5 கிலோ மற்றும் 5 கிலோ மற்றும் 475 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.