தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார்.
அவருக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தரப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
அவருக்கு வயது 71.
தமிழகத்தின் மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி பிறந்தார் விஜயராஜ்.
தமிழ்த் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு சென்ற விஜயராஜ்.
‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக இயக்குநர் எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்ற கட்சியைத் துவங்கி, 2006 ஆம் ஆண்டு விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.
2016 ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
ஆனால் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த விஜயகாந் நரம்புப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டிருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.