மாவீரர் நாளில் புலிச்சின்னம் பொறித்த ஆடையுடன் கலந்துகொண்டதால் கைதான இளைஞருக்கு பிணை!

editor 2

யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு புலிச் சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் பொறித்த உடையுடன் வந்த இளைஞன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இன்று குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து நேற்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தருணத்தில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

குறித்த இளைஞர் நவம்பர் 28ம் திகதி கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article