முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முத்தையன்கட்டுக் குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
அதனால்,
முத்தையன்கட்டுகுளம் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவிலும் திறக்கபட்டுள்ளதுடன் 2’ (2 அடி) வான் பாய்கிறது.
இதனால் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின்
முத்தையன்கட்டு, பேராறு, முத்துவினாயகபுரம், பண்டாரவன்னி, வசந்தபுரம்,
மன்னாகண்டல் கிராம மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,
மன்னாகண்டல் பகுதியில் வீதியைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.