தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைத்தீவின் பெரிய குளங்களான முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக் குளம், மதவள சிங்கன் குளம் மற்றும் ஏனைய சிறிய குளங்கள் வான் பாய்கின்றன. இதனால் மக்கள் மிகுந்த அவதானமாகச் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
முத்தயன்கட்டு, தண்ணிமுறிப்பு, மதவாளசிங்கன் மற்றும் ஏனைய சிறிய குளங்களில் இருந்து அதிகளவான நீர் வெளியேறுகின்றது.
எனவே குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், தங்கள் பிரதேசங்களில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம அலுவலர்களுக்கு அறிவித்து, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கோரிக்கைவிடுத்துள்ளது.
முத்தையன்கட்டுகுளம் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவிலும் திறக்கபட்டுள்ளதுடன் 2’ (2 அடி) வான் பாய்கிறது.
இதேவேளை,
மதவள சிங்கன் குளம் 2′ வான் பாய்கின்றது. இதனால்,
கரைதுறை பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்பு, பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு மக்களை மிகுந்த அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.