முத்தையன்கட்டு குளம் திறக்கப்படுகிறது! முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை! (2ஆம் இணைப்பு)

editor 2

முல்லைத்தீவில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக முத்தையன்கட்டுக் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது. இதனால் குளத்தின் வான் கதவுகள் இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்படவுள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.

இதனால் முத்தையன்கட்டுக் குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் மக்கள் மிகுந்த கவனமாக செயற்படவேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக,

முத்தையன்கட்டு, பேராறு, மன்னாகண்டல், பாண்டரவன்னி, முத்துவிநாயகபுரம், வசந்தபுரம் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article