நாட்டில் பெறுமதி சேர்(வற்)வரி 18 சத வீதமாக அதிகரிக்கப்பட்ட பின்னர் கைபேசிகள், கைபேசி பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று இலங்கை கைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவிக்கையில் ,
அதிகரிக்கப்படும் பொருட்களின் விலைகள் தொடர்பில் இலங்கை கைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானிக்க முடியாது.
கைபேசிகள், கைபேசி துணை பாகங்களான சார்ஜர்கள், கேபிள்கள், கவர்கள், டிஸ்பிளே, ரெம்பேரட் போன்றவற்றின் விலை அதிகரிக்கப்படுவதால் நுகர்வோர் மாத்திரம் அல்ல விற்பனையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த காலகட்டத்தில் கைபேசிகள் அடிப்படை தேவையாக மாறிவிட்டதோடு அதன் துணைக் கருவிகள் மற்றும் பாகங்கள் முக்கியமான பொருட்களாக காணப்படுகின்றன.
கைபேசிகளின் விலை உயர்வுக்கு பின்னர் பாடசாலை பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும் இதனால் கல்வித்துறையும் பாதிக்கப்படும் – என்றார்.