யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழுவைப் படகில் பயணித்து அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள்
நீரியல்வளத் திணைக்களத்தினரால் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.