எதிர்வரும் ஜனவரி முதல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்,
பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பு காரணமாக தயக்கத்துடன் விலை அதிகரிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரிவாயுவின் விலை 18 வீதத்தால் அதிகரிக்கப்படும். இதன்படி, தற்போது 3 ஆயிரத்து 565 ரூபாயாக (கொழும்பு விலை- மாவட்டத்துக்கு ஏற்ப விலை மாற்றம் உள்ளது) 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு 640 ரூபாயால் அதிகரிக்கும் – என்றும் அவர் தெரிவித்தார்.