இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாம்!

editor 2

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடும் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளத்திற்கான நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. இரவும் தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் பாதுகாப்பு கருதி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடும்.

இவ்வாறு கதவுகள் திறக்கப்படும் போது சிறிய அளவிலான திறப்புகளை இடம்பெறும். 

இதனால் பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படாது, இருந்த போதிலும் குளத்தின் நீரேந்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share This Article