இலங்கைக்கு எதிராக தடைகள், வர்த்தகவரிகள் மூலம் அதிகூடிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டுத் தோல்வி என்று பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழில் (லிபரல்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் தெரிவித்தார்.
இலங்கையில் போர் குற்றங்களில் ‘இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக அமெரிக்கா கனடாவை பாராட்டுகிறேன்.
எனது தொகுதியை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தைப்பற்றி அறிய இலங்கைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போய்விட்டார்.
அவருக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியாது’, என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவே உரையாற்றுகையில்,
‘அமெரிக்கா, கனடாவை பின்பற்றி இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சவேந்திர சில்வா, ஜெகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கலாம்.
இலங்கை மீது செல் வாக்கு செலுத்துவதற்காக வர்த்தக உடன்படிக்கைகளை பயன்படுத்த வேண்டும். ஐ. நா. மனித உரிமைகள் பேரவை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவும் வலியுறுத்த வேண்டும். பிரிட்டனும் இதனை வலியுறுத்த வேண்டும்’, என்றும் கூறினார்.