உத்தேசக்கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் பிள்ளைகள் 21 வயதுக்குள் பட்டப் படிப்பை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நேற்று பாராளுமன்றில் நடந்த வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்றும் கூறினார்.