லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
ஆரம்பக் கட்டமாக பயணிகள் போக்குவரத்துக்கு 5 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பேருந்துகளுக்கு ஒருமுறை மின் ஏற்றினால் (சார்ஜ்) 300 கிலோமீற்றர் தூரம் செல்லக் கூடியதென தெரிவிக்கப்பட்டுள்ளது.