களனிப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.