வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களிடம் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.