ஏனைய மதங்களை இழிவாகப் பேசிய சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் 9.20 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், மாலை 5 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.
48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
வெளிநாட்டில் தங்கியிருந்த மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கடந்த மே மாதம் வழங்கிய போதனையின் போது, பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.