மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை கோரும் வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நினைவேந்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தடை செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள் வர்ணங்கள் நினைவேந்தலின் போது பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் நினைவேந்தல்களுக்கு தடை உத்தரவு கோரியிருக்கின்றனர்.
இதன் போது,
முன்னிலையான சட்டத்தரணிகள்,
மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் தடை செய்யப்பட்டதாக இருந்தால் இலங்கையின் தேசியக் கொடியில் இருக்கும் குறித்த வர்ணங்களை நீக்கிவிட்டு வருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில்,
வழக்கு விசாரணையில் பொலிஸாரின் கோரிக்கை மனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது என்று சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தீபங்கள் ஒளிரும், மக்கள் அணி திரளுங்கள் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.