சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு கடத்தப்பட்டனர்!

editor 2

சிறுவர்களை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் குழு தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இந்தக் குழுவால் சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று அறியவருகின்றது.

இந்த சம்பவத்துடன் இடைத்தரகர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதி மன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற் கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர்நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

அதிகளவிலான சிறுவர்கள் கண்டி மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும் இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Article