ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் 16 – ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கு இடைப்
பட்ட காலத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல்.
ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கான உறுதியான திகதி எதிர்வரும் ஜூலை மாதத்தில்
அறிவிக்கப்படும் என்றும் அவர கூறினார்.
அரசமைப்பு சட்ட கட்டமைப்புகளை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் அரசமைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை
முழுமையாக பின்பற்றியே தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆரம்ப மாகியுள்ளன. தேர்தலுக்கான ஏனைய நடவடிக்கைகளுக்கான நிதியை பெறுதல் ஆவணங்களை தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் கூறினார்.
இதேவேளை 2025ஆம் ஆண்டிலேயே பொதுத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல்களை துரிதப்படுத்துவ
தற்கான வாய்ப்புகள் உள்ளதை ஏற்றுக்கொண்டார்.