தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயார் நிலையில் உள்ளது.
வடக்கு, கிழக்கில் 25 இற் கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினை விடங்கள் மற்றும் விசேட மாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்க ளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப் படவுள்ளனர்.
துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக் கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள், வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்கு தயார் நிலையில் உள்ளன.
இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங் களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்பட வுள்ளது. யாழ்ப்பாணத்தில்… யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கொடி காமம், உடுப்பிட்டி – எள்ளங்குளம், வட மராட்சி கிழக்கு – உடுத்துறை, வேலணை – சாட்டி மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல்கள் நடை பெறவுள்ளன.
அத்துடன், நல்லூர், நெல்லியடி – மாலைசந்தியில் விசேடமாக அமைக் கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயங்களி லும் தியாகி திலீபன் நினைவுத் தூபி, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினை விடம் மற்றும் மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இடங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளன.
கிளிநொச்சியில்…
கிளிநொச்சி மாவட்டத்தில் கனக புரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் நினைவிடங் களில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவில்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசு வமடு – தேராவில், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, அளம்பில், வன்னிவிளான்குளம், முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லங்களிலும் கொக்குத்தொடுவாய், களிக்காடு, தேவிபுரம், இரட்டைவாய்க்கால், முல்லைத்தீவு நகர கடற்கரை, சுதந்திரபுரம் ஆகிய இடங் களில் மாவீரர்களை அஞ்சலிக்க ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மன்னாரில்…
மன்னார் மாவட்டத்தில் ஆட் காட்டி வெளி, பெரிய பண்டிவிரிச்சான், முள் ளிக்குளம் துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் நினைவிடங்களிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கண்டலடி, மாவடி முன்மாரி, தாண்டியடி, துயிலும் இல்லங்களில் மற் றும் விசேடமாக அமைக்கப்பட்ட இடங் களில் மாவீரர் நினைவேந்தல்கள் நடை பெறவுள்ளன.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் முன்னெடுக் கப்படவுள்ளது. அத்துடன், கிழக்கு பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளது.
திருகோணமலை நகரப் பகுதியிலும் விசேட இடங்களிலும் மாவீரர் நினை வேந்தல்கள் நடைபெறவுள்ளன.
வரலாறு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் முதல் மாவீரரான லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்) உயிர் நீத்த (1982) நவம்பர் 27ஆம் நாளில் அந்த அமைப்பின் சார்பில் மாவீரர்களானவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.