முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்றைய தினம் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரையில் 24 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் காவல்துறையினர், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.