நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என்கிறார் ஜனாதிபதி!

editor 2
Ranil Wickremesinghe, Sri Lanka's president, speaks during the Nikkei Forum Future of Asia in Tokyo, Japan, on Thursday, May 25, 2023. The forum organized by Nikkei Inc. will continue through May 26. Photographer: Kiyoshi Ota/Bloomberg via Getty Images

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் ராஜபக்ச பரம்பரையின்பிரதிநிதியில்லை surrogate  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆளும் பொதுஜனபெரமுனவும் எதிர்கட்சியான ஐக்கியமக்கள் சக்தியும் தற்போது பிளவுபட்டுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது தசாப்தகால வரலாற்றில் எதிர்கொண்ட மிகமோசமான நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த கோட்டாபயராஜபக்ச நிதியமைச்சர் பசில்ராஜபக்ச ஆகியோரே காரணம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்ற கேள்விக்கு ஆம் அதைத்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல்கி சர்மா மீண்டும் மீண்டும் கேட்டவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத மனோநிலையில் காணப்பட்ட ஜனாதிபதி இந்த நெருக்கடிகள் அவர்கள் காலத்தில் இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார்.

அதேபேட்டியில் பின்னர் ராஜபக்சாக்களுக்கு இந்த நெருக்கடியில் பங்குள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மே 2022 இல் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகிய பின்னரும் ஆட்சிபொறுப்பை ஏற்பதற்கு எதிர்கட்சியினர் முன்வராததை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன் காரணமாக முழு அரசியல் அமைப்பும் வீழ்;ச்சியடைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த நாட்டின் அரசியல் அதிகளவிற்கு தலைகீழாக காணப்பட்டது. அனைவரும் அதிகளவில் பொறுப்புணர்வு அற்றவிதத்தில் நடந்துகொண்டனர் ஆகவே அதனையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் தனியாக ஒரு விடயத்தை மாத்திரம் கருத்தில் கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகவே ராஜபக்சாக்கள் மாத்திரம் இதற்கு காரணமில்லை என சொல்கின்றீர்களா என பல்கி சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்

அதற்கு ராஜபக்சாக்களுக்கும் இதற்கான பொறுப்புள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான சுலோகங்களை உருவாக்குவதற்கு பழக்கப்பட்டுள்ளது ஒருவரும் கடினமான முடிவுகளை எடுக்க தயாரில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகவே இதனை பார்த்தீர்கள் என்றால் எவரும் சிறந்த விதத்தில் செயற்படவில்லை ராஜபக்சாக்களை பொறுத்தவரை அவர்கள் அக்காலப்பகுதியில் ஆட்சியிலிருந்தனர் ஆனால் நெருக்கடி என்பது ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது எனவும் ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்,

அவர்கள் பதவியிலிருந்து விலகியவேளை எதிர்கட்சி பொறுப்பேற்காவிட்டால் நானும் முன்வந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என ஜனாதிபதி பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் ராஜபக்சாக்களை நியாயப்படுத்தவில்லை அவர்கள்தான் காரணம் என தெரிவிக்கின்றேன் ஆனால் அவர்களின் பின்னர் பொறுப்பேற்பதற்கு எவரும் இருக்கவில்லை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பொறுப்பேற்காமல் தப்பியோடியவர்கள் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தான் ராஜபக்சாக்களின் பிரதிநிதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ராஜபக்சாக்களினால் கட்டுப்படுத்தப்படும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தற்போது பிளவுபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article