அதிக ஈரப்பதன் நிறைந்த காற்றின் உள்வருகை காரணமாக இன்று அதிகாலை 2.00 மணிமுதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை
யாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.
இந்த மழை கிடைக்கும் போது இடிமின்னல் நிகழ்வு இடம்பெறும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.