யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தண்டித்த ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் நீதிமன்ற
பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலைக்கு வராத நிலை யில் ஆசிரியரால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து குறித்த மாணவன் வைத்தியசாலைக்குச் சென்றதுடன் சம்பவம் தொடரபில் பொலிஸாருக்கும் முறையிட்டிருக்கின்றார்.
பின்னர்,
மாணவனைத் தாக்கிய ஆசிரியரை பிடித்த பொலிஸார் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
மாணவர்கள் பலர், தொடர்ந்தும் இவ்வாறு ஆசிரியர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுவரும் நிலையில் பல ஆசிரியர்கள் மாணவர்கள் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களைத் தண்டிக்க மறுப்பதாகவும் அது ஆரோக்கியமற்ற எதிர்காலத்தை நோக்கி பல மாணவர்களை தள்ளும் அவல நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் பெற்றோர்கள் பலர் ஆதங்கம் வெளியிட்டுவருகின்றனர்.