நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது நாங்களல்ல என்கிறார் மஹிந்த!

editor 2

நாட்டை வங்குரோத்து நிலைக்குள்ளாக்கியது நாம் அல்லர். அன்றைய நல்லாட்சி அரசுக்கு பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களே காரணம் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான சிங்கள வார ஏடு ஒன்றுக்கு அவர்
வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான் தோல்வியடைந்த போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 வீதமாக இருந்தது.

ஆனால், நல்லாட்சி அரசின் பின்னர் 2020 ஆம் ஆண்டு மீண்டும் நாட்டைக் கைப்பற்றிய போது பொருளாதார வளர்ச்சி வீதத்தை 2 வீதமாகக் குறைத்தது ராஜபக்ஷக்களா என்று ஐக்கிய மக்
கள் சக்தியின் தலைவர்களிடம் கேள்வி எழுப்புவேன்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கின்றேன். 2019 இல் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபயவின் அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்
திருந்தது. எமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி செயற்பட்டு வரிகளை குறைப்பது எவ்வாறு பிழையானது?.

அரசாங்கத்தின் கொள்கை முடிவினால் தான் அனைத்துலக நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. அதற்காக அவர்களின் வேலைத் திட்டத்தில் நாம் இணைந்து கொள்ளவில்லை.

வட் உள்ளிட்ட வரி குறைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற கல்விமான்கள் நிதித்துறையின் நிதிப் பரிந்துரைகளின் பேரில் தற்போதைய அரசுக்கு எதிராக வீதிகளில் ஊர்வலம் நடத்தியது
தான் இங்கு வேடிக்கை-என்றும் அவர் தெரிவித்தார்.

Share This Article