நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
01 இலட்சத்து 50 ஆயிரத்து 17 பேர் 100 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 45.5 வீதமான மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஐந்து மாணவர்கள் 198 புள்ளிகளையும், 4 மாணவர்கள் 197 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேன்முறையீடுகளை இந்த மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தினூடாக குறித்த மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.