இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர் என்கிறார் சஜித்!

editor 2

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல கிரிக்கட்டை பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

எப்பொழுதும் பிரிந்து கிடக்கும் பாராளுமன்றம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பதற்கும்இ கிராமங்களஇ நகர மட்டங்களில்இ மாகாண மற்றும் கிரிக்கெட் கழக மட்டங்களில் அதை அபிவிருத்தி செய்வதற்குமான ஒரு வேலைத்திட்டத்திற்காக ஒன்றிணைந்தன.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பாக இ.எஸ்.பி.என். அலைவரிசைக்கு சொந்தமான கிரிக்இன்போ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிள்ளதன் பிரகாரம்இ நாட்டில் உள்ள ஸ்ரீலங்கா கிரிக்கட் பேரவையே இந்தத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

ஒரு நிறுவனம் நாட்டிற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டாலும்இ இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். ஐ.பி.எல் தடைக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான பங்கேற்பும் இழக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தங்கள் மோசடி பரிவர்த்தனைகள்இ ஊழல் பண பரிவர்த்தனைகள் மற்றும் செயல்முறைகளை ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள முற்படுகின்றனர். ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பல்வேறு தடைகள் வருவதாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்துள்ளனர்.

அவர்கள் அவ்வாறு கூறினால் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்ட கிரிக்கட் நிர்வாகத்தின் மீது இலஞ்சம்இஊழல்இ கப்பம் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமா என்பது பிரச்சினைக்குரியது. நாட்டில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கிடைத்த பணம் கூட திருடப்பட்டுள்ளது. 2018 இங்கிலாந்து இலங்கை சுற்றுப்பயணத்தின் ஒளிபரப்பு உரிமைக்காகஇ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 5.5 டொலர் மில்லியன் தொகைக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. இந்த வைப்புத்தொகை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள கணக்குகளில் இருப்பதாக கூறப்பட்டாலும்இ அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தப் பணம் உண்மையில் நாட்டின் கிரிக்கெட் அபிவிருத்திற்கு கொடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட்டை அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்ட லோடா அறிக்கைக்கு எந்த வித தடையும் விதிக்கப்படவில்லை என்றாலும்இ இலங்கையில் கிரிக்கெட் ஊழல் மிக்கது என்பதை உள்ளடக்கிய குசலா சரோஜனி அறிக்கைஇ சித்ரசிறி அறிக்கை என்பன சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இவ்வாறான செய்திகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு தடை உத்தரவு வரும் போது கிரிக்கெட் விளையாட்டை எப்படி வலுப்படுத்துவது என்பது சிக்கலக்குரியது. தொடர்ச்சியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த அறிக்கைகள் பயனற்றதாகும்.

நாட்டு மக்கள் கிரிக்கெட்டை பாதுகாக்க முன்வர வேண்டும். இவ்வாறு திருடப்படும் பணம் நாட்டு மக்களுக்கு சொந்தமானது. இவ்வாறு பணத்தை திருடும்போது முதுகெலும்பில்லாதவர்கள் போல் இருப்பதா  என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். பாராளுமன்றத்தில் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல ஜனநாயகம் என்ற பெயரில் 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும். நட்பு வட்டார நண்பர்கள்இஉறவுமுறைகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட திருட்டு மோசடிகளாலேயே நாடு வங்குரோத்தாகியது. இது இலங்கை கிரிக்கெட்டையும் ஆக்கிரமித்துள்ளதால் இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Share This Article