இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்குழுவை நீக்கப்போவதில்லை என்கிறார் அமைச்சர்!

editor 2

நாடாளுமன்றில் நாளைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட்டில் இடம்பெற்ற முறைகேடுகளால் கிரிக்கட் விளையாட்டு வீழ்ச்சியடைவதாக மக்கள் வெளிப்படுத்தி தொடர்ச்சியான எதிர்ப்புகளினால் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆனால், தாம் நியமித்த இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவை நீக்கப் போவதில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் களத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விசேட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article