அஞ்சல் திணைக்கள தொழிற்சங்க முன்னணி 48 மணி நேரம் அடையாள பணிப்புறக்கணிப்பு!

editor 2

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சல் அலுவலகங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article