வரவு – செலவுத்திட்ட உள்ளடக்கத்தைப் பார்த்தே ஆதரவு – நாமல்!

editor 2

வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதாலேயே பிரச்னை ஏற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார்.

அதனால் வரவு – செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சிறிலங்கா பொது ஜன பெரமுன இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் அதில் உள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டே முடிவு எடுக்கப்படும்.

அரசியல் நோக்கங்களுக்காக அன்றி, நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுக்கப்படும் – என்றார்.

Share This Article