உதயன் செய்தியாசிரியரிடம் ரிஐடியினர் விசாரணை!

editor 2

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப்அமுதனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினனர் நான்கரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பிலான ஒளிப்படம் மற்றும் செய்தி உதயன் பத்திரிகையில் வெளியாகியிருந்தமை தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

நவம்பர் மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தாள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் நாள் என்பன கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article