அமெரிக்காவால் விஸா மறுக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஆசிய நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை நெருக்கத்தை மேற்குலகினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது .
இந்த பிணைப்பு வர்த்தகம் மூலமும் முக்கியமாக பௌத்தம் மூலமும் வளர்ச்சியடைந்தது- வளர்த்தெடுக்கப்பட்டது.
சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகத்தன்மை மிக்க நண்பன்.
மனித உரிமை பேரவையில் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா இலங்கைக்கு தொடர்ச்சியாக அளித்து
வரும் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.
உலகின் ஈவிரக்கமற்ற அமைப்பினை நாங்கள் தோற்கடித்த வேளை மேற்கு உலக நாடுகள் எங்களை குற்றவாளிகளாக்கின.
ஆனால் சீனா எங்களுக்கு ஆதரவாகயிருந்தது-என்றார்.