யாழ்.போதனா வைத்தியசாலையின் கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்மையால் சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாக நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகும் நோயாளர்கள் ஒரே கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் தொற்றுக்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கழிப்பறைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருகின்ற போதிலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்த் தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்காக வைத்தியசாலைக்குச் செல்பவர்கள் வேறு நோய்களுடன் வீடு திரும்பவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.