யாழ் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துக்கள், சத்திரச்சிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமையே இந்த குருதி தட்டுப்பாட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.