வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நிதி மோசடி செய்த இருவருக்கு விளக்கமறியல்!

editor 2

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து நிதிமோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் பெண் ஒருவரும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 21 இலட்சம் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினால், காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share This Article