இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா கட்டணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த முன்னோடி திட்டம் அமையும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்து வருகிறது.
இந்தநிலையில் விசா கட்டணமில்லாத நுழைவு நடவடிக்கையானது ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவும் என அரசாங்கம் கருதுகிறது.
இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் போது கட்டணம் இன்றி விசாவைப் பெற முடியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.