ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது பாரிய பிரச்னையாகும். யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு எதிர்காலத்தில் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் சிற்றுண்டிகளின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பாக பிரதேச செயலர்களால் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன்…
வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. லொறியும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கோர விபத்தில்…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று இரவு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்தடைந்தார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். பிரான்ஸ்…
"முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி - நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி - தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கருதி நல்ல முடிவை…
இலங்கையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூவர் சாவடைந்துள்ளனர். மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (28) இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை - மெதகமை பகுதியில் காட்டு இன்று…
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று (28) பிறப்பித்துள்ளது. வழக்கு ஒன்றில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் வசந்த முதலிகே நேற்று (27) பொலிஸாரால் கைது…
"இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்குச் செல்ல வேண்டும். எந்தத் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் இன்று மேலும் கூறியதாவது:-…
"சர்வதேசமே எமக்காகக் குரல் கொடு" என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இந்தப் பேரணியை முன்னெடுத்தது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும்,…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் விடுத்திருந்த அழைப்புக்கு இணங்க இந்தக் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். அவருடைய பெயர் சிவசுகந்தி (வயது 43) என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்று திரும்பும் போதே அவர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் திருமணமாகாதவர்…
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வீட்டில் பூஜை அறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி - ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்று வியாழக்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.…
யாழ்ப்பாணம், சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி என்பவரின் வீட்டினுள் 27-07-2023 இரவு 10.45 மணியளவில் இளவாலைப் பொலீசார் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள மனிதப் புதைகுழிககு சர்வதேச…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில்ஆலய வழிபாட்டுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன் தினம் மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எருவில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த மோகன் கதீஸ் (வயது-19) என்பவரேஇவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.…
அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டரெக பகுதியைச் சேர்ந்த…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account