மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில்
ஆலய வழிபாட்டுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று
முன் தினம் மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எருவில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த மோகன் கதீஸ் (வயது-19) என்பவரே
இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தாந்தாமலை ஆலயத்துக்கு வழிபாட்டிற்காக
சென்று ஆலயத்தின் அருகில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோது
நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த நண்பர்கள் அவரை மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்
பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகா
ரிக்கு பரிந்துரைத்தார்.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.