யாழ். சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீது போதைப்பொருட்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் இல்லை – நீதி அமைச்சர்!

editor 2

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது பாரிய பிரச்னையாகும். யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் யாழ்ப்பாண சிறைச் சாலைக்கு கண் காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண் டிருந்தார்.

கண்காணிப்பு விஜயத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாட லின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி விக்கையில், ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்தின்போது சிறைச்சாலை அதி காரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக் கின்றனர். இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதனை மதிக்கிறோம். அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

இது மிகவும் பாராட்டத் தக்கதாகும். முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம்.

இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்-என்றார்

Share This Article