எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார்! – சஜித் அறிவிப்பு

editor 2

“இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்குச் செல்ல வேண்டும். எந்தத் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் இன்று மேலும் கூறியதாவது:-

“இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரசொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன.

அஸ்வெசும வரிசையிலும் மக்கள் உயிரிழக்கின்றனர். சிறிய மற்றும் நடுத்தர வர்த்த முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், ஆட்சியே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளது. பலவீனமான ஆட்சி நிர்வாகம் நடைபெறுகின்றது.

ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மக்கள் இருக்கும் அவலநிலையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் புதிய ஆணைக்குச் செல்ல வேண்டும். அந்தப் புதிய மக்கள் ஆணைக்குள் புதிய தேசிய கொள்கையின் மூலம் நாட்டின் இலக்குகளை அடைய முடியும்.

எந்தத் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. மக்களின்  கோரிக்கையான தேர்தல் உரிமை வழங்கப்பட வேண்டும். மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் ஆணை எல்லாவற்றையும் விட முக்கியமானது.” – என்றார்.

Share This Article