வங்களாவிரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! தீவிரமடைவது குறித்து எச்சரிக்கை!

editor 2

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கலாநிதி சிரேஷ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

வானிலை குறித்த மேலும் கூறுகையில்,

கிழக்கு, ஊவா  மற்றும் மத்திய   மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும்  75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்களுக்கு மேலாக இணைந்ததாக தாழமுக்க வலயம் ஒன்று உருவாகியுள்ளது. 

இது அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாறக்கூடும். 

ஆகையினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

மேலும்  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வுகூறல்களை  கவனித்திற்கொள்ளுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Share This Article