மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அம்பிட்டிய சுமண தேரர் பொலிஸாருடன் நேற்று தர்க்கத்தில் ஈடுபட்டார்.
அண்மையில்,
மாதவனைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்தன.
பல தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு புத்தர் சிலையை பொலிஸார் அகற்றினர் என்று கூறப்படுகின்றது – எனினும், இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில்,
அந்தப் பகுதியில் கடும் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.
புத்தர் சிலை அகற்றப்பட்டதாக வெளியான தகவல்களை அறிந்து
சிலையை அவ்விடத்தில் நிறுவிய சுமணரத்ன தேரர் அங்கு சென்றார்.
அவரை புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு செல்ல பொலிஸார் அனுமதிக்க வில்லை.
இந்நிலையில், அவர் பொலிஸார் பெரும் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
அத்துடன், தகாத வார்த்தகளால் பொலிஸாரை இதன்போது ஏசினார் என்றும் அறிய வருகின்றது.