மோதல்கள் தீவிரமாக அதிகரித்துள்ள போதிலும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்கவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் இராஜதந்திரப் பணிகளின் மூலம் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர இலங்கை அதிகாரிகள் தயாராக இருப்பதோடு டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் இருந்து கோரிக்கைகள் எதையும் இதுவரை பெறவில்லை.
ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து 49 வயதான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
இஸ்ரேல் அதிகாரிகளின் அறிவிப்பை அடுத்து 17 இலங்கையர்கள் வடக்கிலிருந்து காசாவின் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையர்கள் இலங்கைக்கு செல்ல முற்படுகிறார்களா அல்லது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் வடக்கு காஸாவில் எதிர்பார்க்கப்படும் தரைப்படை நடவடிக்கை முடியும் வரை தெற்கில் இருக்க விரும்புகின்றார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள அனைத்து இலங்கையர்களும் உடனடியாக தூதரகத்தில் தங்களது தகவல்களை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளன.
- 70 386754
- 71 960810
- slemb.beirut@mfa.gov.lk