தீவிரமடையும் எலிக்காய்ச்சல்; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

editor 2

தீவிரமடையும் எலிக்காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எலி காய்ச்சலினால் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 07 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 125 பேர் வரை உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

Share This Article